உலகளவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்டவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் தர்பார் திரைப்படம் வெளியானது. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தை இயக்கியிருந்தார். தற்போது சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார்.
.ரஜினிகாந்தை போலவே அவரது ரசிகர்களும் பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். சென்னை உயர்நீதி மன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். MMM மருத்துவமனை மற்றும் மோகன் ஃபௌண்டேஷன் இணைந்து பிப்ரவரி 16-ம் தேதி இந்த அற்புதமான நிகழ்வை நடத்தியுள்ளனர். சென்னை முகப்பேரில் அமைந்துள்ள MMM மருத்துவமனையில் 450 பேருக்கு மேல் இந்த உடல் தானம் செய்ததாக நெருங்கிய திரை வட்டாரம் மூலம் செய்தி தெரியவந்தது.
.ரஜினி மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் திரு. VM சுதாகர் அவர்களின் நல்லாசியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் திரு. K உதயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் திரு. R அரவிந் குமார் வரவேற்புரை ஆற்றினார். கூடுதல் சிறப்பாக மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திரு. AVK ராஜா அவர்கள், மத்திய சென்னை மாவட்ட இணை செயலாளர் திரு R சூர்யா அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. பாலம் கல்யாண சுந்தரம், திரு. ரவீந்திரன் துரைசாமி, நடிகர் மயில்சாமி மற்றும் வழக்கறிஞர் திரு. K அறிவடிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கட்-அவுட், பேனர்கள், பாலபிஷேகம் போன்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்காமல் இதுபோன்ற பயனுள்ள காரியங்களில் ஈடுபடும் ரசிகர்களை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.