ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனராக நடிகராக பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுக்கும் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அடுத்ததாக சூப்பர் ஸ்டாரின் மெகா ஹிட் படமான சந்திரமுகி படத்தின் பார்ட் 2வில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் P.வாசு இயக்கத்தில் தயாராகும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து லாரன்ஸ் நடிப்பில் அதிகாரம் திரைப்படமும் தயாராகி வருகிறது. இந்த வரிசையில் அடுத்ததாக தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்கள் தனது முதல் படமாக இயக்கும் ருத்ரன் படத்தில் லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர் S.கதிரேசன் தனது FIVE STAR கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள ருத்ரன் திரைப்படத்திற்கு RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முன்னதாக ருத்ரன் திரைப்படம் இந்த ஆண்டு (2022) கிறிஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் ருத்ரன் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் நிலையில், திரைப்படத்தின் VFX பணிகள் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டியிருப்பதால் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக ருத்ரன் திரைப்படம் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Rudhran will have a Grand Theatrical release on April 14, 2023. pic.twitter.com/vrCWJcJ7d5
— Five Star Creations LLP (@5starcreationss) September 26, 2022