பின் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவர் 2002 ல் வெளியான அற்புதம் படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். அதே நேரத்தில் தெலுங்கு திரையுலகில் மாஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த பின் மீண்டும் தெலுங்கு மொழியில் ஸ்டைல் என்ற படத்தை இயக்கி நடித்தார் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து நடிப்பிலும் இயக்கத்திலும் கவனம் பெற்ற ராகவா லாரன்ஸ் கடந்த 2007 ல் வெளியான முனி திரைப்படம் மூலம் ஒரு சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றார். திகில் படத்தினை குடும்பங்கள் கொண்டாடும் அளவு திரைக்கதை கொடுக்க முடியும் என்று டிரெண்ட் செய்து மாஸ் காட்டியவர் மாஸ்டார் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து பாண்டி, ராஜாதி ராஜா, இரும்புகோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களில் நடித்தும் காஞ்சனா 1,2,3 என்று படங்களை இயக்கியும் தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணியில் திகழ்ந்தார். இது மட்டுமல்லாமல் இந்தியில் அக்ஷய் குமார் அவர்களை வைத்து ‘லக்ஷ்மி’ என்ற படத்தை இந்தியிலும் இயக்கி பாலிவுட்டிலும் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் தற்போது அவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் வெற்றிமாறன் எழுதி தயாரிக்கும் படமான ‘அதிகாரம்’ படத்திலும் மற்றும் பி வாசு அவர்கள் இயக்கி வரும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் எழுத்தில் இயக்குனர் ரத்னா இயக்கவிருக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இதனிடையே ராகவா லாரன்ஸ் நடித்து வரும் தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகவிருக்கும் ‘ருத்ரன்’ திரைப்படத்தினை ரசிகர்கள் பெரும் எதிர்பார்பில் காத்திருக்கின்றனர்.

அட்டகாசமான அதிரடி காட்சிகளுடன் உருவான ருத்ரன் திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நேர்காணலில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு தனது ரசிகர்கள் முன்னிலையில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் தனது வளர்ச்சிக்கு பெரும் காரணமாகவும் உந்துதலாகவும் இருந்த தனது அம்மா குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை.

"அம்மா இல்லனா நான் இறந்த இடத்துல புல் முளைச்சிருக்கும்.. எனக்கு Brain Tumor வந்து ரொம்ப கஷ்டப்பட்டோம். எனக்கு ஒரு பக்கம் கை கால் விழுந்துடுச்சு.. எங்க அம்மா என்ன தூக்கிட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து திருவொற்றியூர் வரை தூக்கிட்டே நடப்பாங்க.. அவங்களுக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவங்கள நல்லா பாத்துக்கனும்.. அம்மா ன்ற வார்த்தை தான் தெய்வம்..அம்மா அப்பாக்கு எதுவும் பெருசா பண்ண வேண்டாம்.. அவங்க கால்ல விழுந்து தினம் ஆசிர்வாதம் வாங்கினால் எந்த கோவிலுக்கு போக தேவையில்லை... அம்பானி ஆகனும்னாலும் அம்மா கால்ல விழுந்தா தான் ஆக முடியும்.

அப்பா இறந்த பின் நான் தம்பி தங்கச்சி னு கஷ்டபட்டோம். அந்த நேரத்தில் அப்பாவோட வேலை வருது.. என் மனசுக்கு அது பிடிக்கல.. அந்த வேலை எனக்கானது இல்லனு சொல்லுது.. நான் அம்மா கிட்ட சொன்னேன்.. 'இந்த வேலை பண்ண பிடிக்கல' னு அப்போ வாடகை வீட்டில் தான் இருந்தோம் அந்த வேலைதான் எங்களுக்கு சாப்பாடு போட்டது. அப்போ அம்மா 'என்ன பன்ன போற?' ன்னு கேட்டாங்க .. ' நான் சினிமா போகபோறேன்னு' சொன்னேன். அப்போ அம்மா இந்த வேலை தான் பண்ணனும் சொல்லிருந்தா நான் இந்நேரம் எல் ஐ சி ல பைல் எடுத்துட்டு கொடுத்துட்டு இருந்திருப்பேன். அம்மா கொடுத்த தைரியம் தான் இன்னிக்கு இந்த நிலையில் இருக்கேன்..” என்றார் ராகவா லாரன்ஸ்.

மேலும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது திரைப்பயணம் குறித்தும் தன் வாழ்வின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்தும் தன் ரசிகர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..