திரையுலகில் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி இன்று டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, இயக்குனராக அதை தாண்டி சிறந்த மனிதராக விளங்கி வருகிறார். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இத்தாலியில் அரசு சொல்வதை கேட்காமல் இருந்த மக்களின் நிலைமை தற்போது பிணத்தை புதைக்க கூட இடம் இல்லாமல் அழுதுகொண்டிருக்கிறார்கள். அதே நிலைமை நமக்கும் வந்துவிடக் கூடாது. தயவு செய்து யாரும் வெளியே போகாதீங்க என்று கூறியுள்ளார். தொடர்ந்து அந்த வழியாக வெளியில் சென்ற ஒருவரை லாரன்ஸ் கூப்பிட்டு, 20 நாள் லீவு கொடுத்திருக்கிறார்கள் அதனால் அப்பா அம்மாவை பார்க்க வீட்டிற்கு செல்கிறேன் என்கிறாயே.

.

இது என்ன பொங்கல் தீபாவளினு நெனச்சிட்டியா. அப்பா அம்மா கூட சந்தோசமா இருக்க போறேன்னு தானே சொன்ன.. அவங்கள சாவடிக்க போற நீ. நீ போய் பஸ்ல உட்காருவ. அங்க யாருக்காவது கொரோனா இருந்தால் உனக்கு தொற்றிக்கொள்ளும். அதன்பிறகு நீ உன் அப்பா அம்மாவை கட்டி பிடித்தால் அது அவர்களுக்கும் பரவும். அதனால நீ வீட்டுக்கு போக வேணாம். இதெல்லாம் முடிஞ்சபிறகு எவ்ளோ வேணும்னாலும் சேர்ந்து சந்தோசமாக இருக்கலாம். உன் காலில் விழுந்து கேட்கிறேன் தயவு செய்து வெளியே போகாதே என கேட்டுக்கொண்டார்.

.

#StayHomeStaySafe pic.twitter.com/KMxsbWXf0O

— Raghava Lawrence (@offl_Lawrence) March 25, 2020