இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் மாதவன் தமிழ் ஹிந்தி தெலுங்கு ஆங்கிலம் என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் பலவித கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். இதனிடையே நடிகராக மட்டுமல்லாமல் தற்போது முதல் முறை இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள மாதவன் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் ராக்கெட்ரி.
விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோபிக் படமாக உருவாகியிருக்கும் ராக்கெட்ரி திரைப்படத்திற்கு மாதவன் திரைக்கதை எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான திரு.நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் ராக்கெட்ரி-நம்பி விளைவு படத்யில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்க, அவரது மனைவி மீனா நாராயணன் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார்.
மேலும் ரவி ராகவேந்திரா, கார்த்திக் குமார், மோகன் ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் சூர்யா மற்றும் நடிகர் ஷாரூக் கான் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். ட்ரை கலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து தமிழ், ஹிந்தி & ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவரும் ராக்கெட்ரி படத்திற்கு ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் ராக்கெட்ரி திரைப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ராக்கெட்ரி திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் முன்னணி சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
We’re proud & honoured to associate with @ActorMadhavan for the Tamil Nadu theatrical distribution of #Rocketrythefilm
— Red Giant Movies (@RedGiantMovies_) May 4, 2022
In cinemas from July 1st! @TricolourFilm @VijayMoolan@NambiNOfficial pic.twitter.com/8zCR0PaFnJ
#Rocketry: The Nambi Effect has been chosen for a red carpet premiere at the prestigious #CannesFilmFestival. It will be screened on May 19.
— 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@SamCSmusic) May 4, 2022
I feel proud to have scored music for this movie
Tnkq @ActorMadhavan @SimranbaggaOffc #Rocketry pic.twitter.com/Bbf4DfLvi9