OTT தளங்களின் வளர்ச்சியை அடுத்து தமிழில் anthology படங்கள் அதிகரித்து வருகின்றன.2020-ல் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்த anthology படம் புத்தம் புது காலை.கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா, ராஜீவ்மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட 5 இயக்குனர்கள் 5 வித்தியாசமான கதைகளுடன் இந்த படத்தினை உருவாக்கினர்.
இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது.இந்த படத்திலும் 5 வித்தியாசமான கதைகளுடன் 5 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.ரிச்சர்ட் ஆன்டனி, பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா பாலசுந்தரம்,சூர்யகிருஷ்ணா உள்ளிட்ட இயக்குனர்கள் இந்த படத்தினை இயக்கியுள்ளனர்.
புத்தம் புது காலை விடியாதா என்று இந்த இரண்டாம் பாகத்திற்கு பெயரிட்டுள்ளனர்.ஜோஜு ஜார்ஜ்,அர்ஜுன் தாஸ்,நதியா,லிஜோமோல் ஜோஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கௌரி கிஷன்,மணிகண்டன்,விஜி சந்திரசேகரன்,டிஜே அருணாச்சலம்,திலீப் சுப்பராயன்,சனந்த் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் வரும் ஜனவரி 14ஆம் தேதி அமேசான் ப்ரைம்மில் வெளியாகவுள்ளது.இதன் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்