உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் சைக்கோ. மிஸ்கின் இந்த படத்தை இயக்கினார். விஷால் வைத்து துப்பறிவாளன் 2 படத்தின் இறுதிகட்ட பணிகளில் பணிபுரிந்து வருகிறார் மிஸ்கின். கடந்த ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார்.
இதில் பார்வையற்றவராக நடித்து அசத்தியுள்ளார் உதயநிதி. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்தது. இதில் இயக்குனர் ராம், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக இருந்தது பின்பு சில காரணத்தால் அவருக்கு பதிலாக தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்தார் என்பது நாம் அறிந்தவையே.
இந்த படத்தின் எடிட்டர் அருண்குமார் சைக்கோ திரைப்படம் உருவான விதம் குறித்து கலாட்டா குழுவுடன் பகிர்ந்துள்ளார். அப்போது பேசுகையில், நீங்கள் பார்த்த நிர்வாண காட்சிகள் குறைவானவையே. இன்னும் பயன் படுத்ததாத நிர்வாண காட்சிகள் அதிகம் இருக்கிறது. மூன்று மணிநேரத்திற்குள் படத்தை எடுத்துவிட்டார் மிஸ்கின். அதனால் குறைப்பதற்கு வசதியாக இருந்தது. படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சி, எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டில் இன்னும் அழுத்தமாக இருந்தது. ஒரு ஒரு பக்கம் திருப்ப திருப்ப நெஞ்செல்லாம் பாரம் ஆகிவிடும் என்றார். இயக்குனர் மிஸ்கினின் எழுத்துக்கள் மிக அழகாக இருக்கும் என்று கூறினார். அவர் எழுதிய கதா பாத்திரங்கள் அனைவரும் போட்டி போட்டு நடிப்பார்கள்.