இயக்குனர் பா ரஞ்சித் மூன்றாவது முறையாக ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா அவர்களுடன் இணைந்துள்ள திரைப்படம் தங்கலான். முன்னதாக இவர்கள் கூட்டணியில் அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் தனித்துவமான டிரெண்ட் செட் செய்த திரைப்படங்களாகும். இந்த முறை நடிகர் சியான் விக்ரம் வைத்து பிரம்மாண்டமான திரைப்படத்தை உருவாக்கி வருகின்றனர் பா ரஞ்சித் , KE ஞானவேல் ராஜா கூட்டணி.
கோலார் தங்க வயல் கதையை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள தங்கலான் கதைக் களம் 1800 ம் ஆண்டின் காலக் கட்டத்தில் நடைபெறுவதாக முன்னரே கூறப்பட்டது. அதன்படி கோலார் தங்க வயலில் தங்கலான் திரைப்படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ளது. இப்படத்தில் சீயான் விக்ரம் அவர்களுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய செல்வா.RK படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதுவே ஜிவி பிரகாஷ் குமார் – பா ரஞ்சித் இணையும் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெலியாகவுள்ள இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஒடிடி நிறுவனம் NETFLIX கைப்பற்றியுள்ளது.
ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் உயர்த்தும் தங்கலான் திரைப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா அவர்களிடம் படம் குறித்து கேட்கையில் அவர்.
"விக்ரம் ரொம்ப Dedication.. வேற லெவல்.. மார்ச் மாதம் படம் தொடங்கும் என்று ரஞ்சித் ஒரு தேதி சொன்னார். அதற்காக விக்ரம் 35 கிலோ குறைச்சு காத்திருக்காரு.. அவர் அவரையே வருத்திட்டு வேலை செய்யுற ஆள். அப்பறம் 3 மாதம் தள்ளி போச்சு.. அவர் அதே எடையில் உடலை பராமரித்து வந்துள்ளார். அது ரொம்ப கஷ்டம்.
படப்படிப்பு தளத்தில் அந்த நாள் முழுக்க தண்ணீரில் படம் எடுத்துட்டு இருந்தாங்க.. விக்ரம் சார் ஷாட் 5.30 மணிக்கே முடிஞ்சிடுச்சு.. இரவு 7 மணி வரைக்கும் உதவி இயக்குனர் வேலை பார்த்துட்டு இருக்காரு.. நான் கவனிக்கல.. அவர் வேலை முடிஞ்சிடுச்சு ஆனா அவ்ளோ ஈடுபாடுடன் வேலை பார்த்துட்டு இருக்காரு.. நான் 65 வது நாள்தான் படப்பிடிப்பிற்கு போனேன்.. அதுவரைக்கும் நடந்த விஷயத்த 1.30 மணி நேரம் என்கிட்ட ஈரத்துல நின்னுட்டு விவரிச்சிட்டு இருக்காரு.. எனக்கே யார் படம் எடுக்குறானு தெரில.. அவ்ளோ ஈடுபாடுடன் இருந்து வருகிறார் விக்ரம்.” என்றார்.
மேலும் அதனை தொடர்ந்து “தங்கலான் படம் 3D ல் உருவாகி வருகிறது. இந்த படத்தை முடிந்தளவு எவ்வளவு மொழியில் மொழி பெயர்க்க முடியுமோ அவ்ளோ மொழியில் மொழி பெயர்க்க போறோம்." என்றார் KE ஞானவேல் ராஜா.
மேலும் தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..