தென்னிந்திய திரையுலகில் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோவாக திகழும் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி ரிலீசாகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி அருகில் திரைப்படத்தின் படப்பூஜை நடைபெற்ற நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் களுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.
தளபதி விஜய் உடன் இணைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் தளபதி 67 படத்தின் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த அப்புறம் தியாகிட்ட போயிட்டு இரு தளபதி 67 திரைப்படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் தளபதி 67 திரைப்படம் LCU-ல் இருக்குமா..? எனக் கேட்டபோது, “அது பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எதுவும் சொல்லாத போது நாம் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் எல்லோரும் சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் அது ஒரு யுனிவர்சல் கதை. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது விஜய் சாருக்கு முதல் PAN INDIA திரைப்படமாக இருக்கும்.. அது கேரன்டி! இதுவரை அவர் PAN INDIA படம் செய்யவில்லை. இந்த படத்துல நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு PAN INDIA-ஆக இருக்கிறது. படத்தின் மேக்ங்கும் இந்தியாவை சுற்றி பல பகுதிகளில் காஷ்மீர் உட்பட நிறைய லொகேஷன்களில் படமாக்கப்படுகிறது. கதை களத்தில் ஆரம்பித்து நடிகர் நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு என அத்தனையும் PAN INDIA ஆக தயாராகிறது. அறிவிப்பும் கூட PAN INDIAஆக இருக்கும். விஜய் சார் கூட மிகப் பிரம்மாண்டமான ஒரு படமாக திட்டமிட்டு இருக்கிறோம் என சொன்னார். எப்படி ஒரு கேஜிஎப் 2 இந்தியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோ அது அளவிற்கு ஒரு பெரிய படமாக தளபதி 67 இருக்கும். இனி தமிழகத்தில் விஜய் சாருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவருடைய அடுத்த திட்டம் இந்திய அளவில்… ஆந்திரா தெலுங்கானாவை தாண்டி கேரளாவை பார்த்தீர்கள் என்றால் அது அவருடைய பகுதிதான் எனவே அடுத்ததாக வட இந்தியாவில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை கொடுக்கும் ஒரு PAN INDIA படமாக இது மாற வேண்டும். அதனுடைய லுக், பொசிஷன் என அனைத்தும் அதற்கேற்றார் போல் தயாராகி வருகிறது. எனவே அதன் கதை ஒரு PAN INDIA கதையாக தான் இருக்கும். அது லோகேஷ் கனகராஜ் யுனிவர்சாக இருக்குமா என்பதை லோகேஷ் கனகராஜ் தான் சொல்ல வேண்டும்” என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார். மேலும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட தனஞ்செயன் அவர்களின் முழு பேட்டி இதோ…