இந்த ஆண்டு வெளியான பக்கா கமர்ஷியல் திரைப்படமாக மக்கள் கொண்டாடி வரும் திரைப்படம் சிலம்பரசனின் பத்து தல. கடந்த மார்ச் 30 ம் தேதி இப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆரவார கொண்டாடத்தின் மத்தியில் இன்று வரை நல்ல வரவேற்புடன் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கன்னட சினிமாவில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘மஃப்டி’ திரைப்படத்தின் கதைகருவை தழுவி பக்கா மாஸான கதைகளத்தில் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா பத்து தல திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிரட்டலான தோற்றத்தில் சிலம்பரசன் நடிக்க அவருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். மேலும் படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் ஒழிக்க ரசிகர்கள் திருவிழா போல் பத்து தல திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படத்தின் வசூல் மற்றும் வரவேற்பு குறித்து அவர் பேசுகையில்,

“கண்டிப்பா சிம்புவிற்கு ரசிகர்கள் அதிகம். பத்து தல திரைப்படம் பின்பு சிம்புவை ஒரு பெரிய நடிகராக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்குமுன் அவரை இளம் நடிகராக பார்த்தனர்.‌ அதே மாதிரிதான் அவருக்கு மாநாடு திரைப்படம் இளைஞர் தோற்றமும் கொடுத்தது. அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படத்தில் நடிப்பு ரீதியாக கவனம் பெற்றார். ஆனால் இதில் அவர் மாஸ் நடிகராக தோன்றினார். இதில் எல்லா விதமான வகையில் சிம்பு கொடுத்து முழுமையான நடிகராக இந்த படத்தில் தெரிந்தது. இரண்டாவது பாகம் சிம்புவின் அதகளம் ரசிகர்கள் அதிகம் கொண்டாடினார்கள்" மேலும் தொடர்ந்து அவர்,

"முதல் நாள் வசூலாக 12 கோடி உலகம் முழுவதும் வசூலித்து உள்ளது. இன்னிக்கு முதல் 5 நாள் முடிந்த பின் 25 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. அந்த அளவு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதைவிட முக்கியமானது விடுதலை படத்தை மக்கள் கொண்டாடி கொண்டு இருக்கும் நேரத்தில் விடுதலை திரைப்படம் எந்த வகையிலும் பத்து தல படத்தை இறக்கவில்லை. பத்து தல திரைப்படத்திற்கான பார்வையாளர்கள் தொடர்ந்து திரையரங்குகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்".

மேலும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் தங்கலான், லியோ மற்றும் சூர்யா 42 ஆகிய படங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட பல அட்டகாசமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..