செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி படிப்படியாக சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வளர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர்.டிவியில் இருந்த போதே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் , தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வெற்றி நடிகையாக உருவெடுத்தார்.இதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர்,அருண் விஜயுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்த ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மனதில் ஒரு நல்ல நடிகையாகவும் இடம்பிடித்தார்.
இதனை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2,எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை,ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் ஓ மணப்பெண்ணே,லாரன்ஸுடன் ருத்ரன்,STR கெளதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல,அசோக் செல்வனுடன் ஹாஸ்டல்,அருண் விஜய் நடிக்கும் AV 33 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்வார் ப்ரியா.தற்போது புடவையில் தனது போட்டோஷூட் வீடியோ ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் ப்ரியா பவானி ஷங்கர்.இந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்
A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)