தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான நடிகர் பிரபாஸின் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவர இருக்கும் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படத்தின் படக்குழுவினர் ரசிகர்களின் படைப்பாற்றலுக்கு அட்டகாசமான புதிய வாய்ப்பு ஒன்றை வழங்கி இருக்கின்றனர். மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டிருக்கும் நட்சத்திர நாயகர்களின் படங்களுக்கும் அவர்களது மற்ற கொண்டாட்டங்களுக்கும் ரசிகர்களே அவர்களது படைப்பாற்றலின் மூலம் அட்டகாசமான போஸ்டர்கள் வீடியோக்கள் அனிமேஷன் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கி உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது வழக்கம் அந்த வகையில் அவர்களது இந்த படைப்பாற்றலை கௌரவிக்கும் விதமாக பிரபாஸின் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் பட குழுவினர் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அந்த அறிவிப்பில்,
“சலார் ரசிகர்களின் படைப்பாற்றலை வெளிக் கொண்டு வருவதில் ஒரு அட்டகாசமான வாய்ப்பை கொடுப்பதற்கு மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு HOMBALE FILMS நிறுவனத்தின் டிசைன் அணியிடமிருந்து இமெயில் அனுப்பப்படும் மேலும் அவர்களது கலைப்பணி HOMBALE FILMS அதிகாரப்பூர்வ தளங்களிலும் உலகம் முழுக்க இருக்கும் பிரம்மாண்டமான விளம்பர பலகைகளிலும் வெளியிடப்படும். உங்களுடைய படைப்புகளை salaar.army பகிர்ந்து salaar.army/creativearmy -யை மொத்த உலகமும் ரசிக்க வையுங்கள். உங்களுடைய படைப்பாற்றலின் ரசத்தை நிரம்பி வழிய விட்டு உங்களது கலைப் பணிகளின் வாயிலாக சலார் உலகத்தின் வெவ்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் அமைப்புகளை வெளி கொண்டு வாருங்கள். தேர்ந்தெடுக்கப்படும் ரசிகர்களுக்கு homabaleverse.com மெர்ச்சண்டைசில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். சலார் பட குழு வெளியிட்ட அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
கே ஜி எஃப் திரைப்படங்களின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படத்தில் மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்க, ஜெகபதிபாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி, சப்தகிரி ஆகியோர் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Hombale Films நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி வரும் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படத்திற்கு புவன் கௌடா ஒளிப்பதிவில் உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவரும் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வருகிற டிசம்பர் 22ஆம் தேதி சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் 1, கடந்த 2022 ஆம் ஆண்டு அதன் இரண்டாவது பாகமாக வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படங்கள் இமாலய வெற்றி பெற்று இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தன. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் இந்த சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.