தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் நடிகை தமன்னா ,தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, அயன், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
கண்டேன் காதலை, பையா, சிறுத்தை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னா, தமிழில் தளபதி விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் தெலுங்கில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் என நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக உயர்ந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை தமன்னா சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிரங்கவுள்ளார். நடிகை தமன்னா உலகளவில் பிரபல நிகழ்ச்சியான மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தெலுங்கு வெர்ஷனில் கலந்து கொள்ள உள்ளார். பிரபல தெலுங்கு தொலைக்காட்சியான ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சியில் நடிகை தமன்னா தொகுத்து வழங்க உள்ளார் என்ற தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்து கொள்வதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விதத்தில் நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.இதேபோல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.