மலையாள திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக என பல்வேறு கதாப்பாத்திரங்களில் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ரஹ்மான்.
குறிப்பாக தமிழில் இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் புதுப்புது அர்த்தங்கள், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர், சங்கமம், அஜீத் குமாரின் பில்லா, சூர்யாவின் சிங்கம் 2, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் ரஹ்மான் தனது சிறப்பான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும், நடிகர் விஷால் முதல்முறை இயக்குனராக களமிறங்கும் துப்பறிவாளன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஹ்மானின் மகள் ருஷ்டா - அல்தாப் நவாப் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
நேற்று, (டிசம்பர் 9ஆம் தேதி) நடைபெற்ற நடிகர் ரஹ்மான் மகளின் திருமண வரவேற்பு விழாவில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டார். மேலும் தமிழ் மற்றும் மலையாள திரை உலகின் பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சென்னையில் நடைபெற்ற திரைப்பட நடிகர் திரு. ரஹ்மான் அவர்களின் மகள் ருஷ்டா ரஹ்மான் - அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமைக்கூடை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினார். pic.twitter.com/8fZEpF5gPD
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 9, 2021