துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பொங்கல் விருந்தாய் வெளியான திரைப்படம் பட்டாஸ். இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்தது. இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இணைந்து இசையமைத்தனர். KPY சதீஷ் நகைச்சுவையில் தனுஷுடன் இணைந்து பட்டையை கிளப்பினார்.
தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மெஹ்ரீன் பிர்ஸாடா ஆகியோர் நடித்திருந்தனர். எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி போன்ற அசத்தலான படைப்புக்களை தந்தவர் இந்த படத்திலும் சீரான கதைக்கருவுடன் அசத்தியுள்ளார்.
படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி வாங்கியது. தற்போது படத்திலிருந்து மவனே பாடல் வீடியோ வெளியானது. அறிவு மற்றும் விவேக் சிவா பாடிய இந்த பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார். தனுஷ் தற்போது கர்ணன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அத்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகவுள்ளது.