தமிழ் சினிமாவின் இந்த வார புதுவரவாக மிகப் பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் ஒபெலி கிருஷ்ணன் இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெளியான பத்து தல படத்தில் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் நடிகர் கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாசலம், கலையரசன், சென்ட்ராயன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருகின்ற நிலையில் பத்து தல திரைப்படம் கடந்த மார்ச் 30 ம் தேதி உலகமெங்கும் வெளியானது.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பக்கா கமர்ஷியல் திரைபடமாக உருவான பத்து தல படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். மிகப்பெரிய ஓபனிங்கை பெற்று தமிழ் சினிமாவிற்கு மேலும் ஒரு வெற்றியினை பெற்று தந்துள்ளது. இந்த ஆண்டு மேலும் ஒரு தமிழ் சினிமா வெற்றியை பெற்றுள்ளதாலும் நடிகர் சிலம்பரசனின் தொடர் வெற்றிகளை உருதிபடுத்தியதாலும் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் பத்து தல திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி முதல் நாள் வசூலாக பத்து தல படம் 12.3 கோடி வசூலித்துள்ளது. மேலும் திரைப்படம் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பத்து தல திரைப்படத்தின் விநியோகஸ்தர்களில் ஒன்றான ‘சக்தி பிலிம் பேக்டரி’ சார்பில் சக்தி வேலன் படக்குழுவினருக்கு பத்து தல வெற்றியினை கொண்டாடும் விதத்தில் படக்குழுவினருக்கு மாலை அணிவித்து மரியாதை தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.