கடந்த 2008-ம் ஆண்டு பூ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகை பார்வதி. தனுஷ் நடித்த மரியான் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து பெங்களூர் நாட்கள், உத்தம வில்லன் போன்ற படங்களில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான சார்லி, உயரே, வைரஸ் போன்ற படங்கள் இவருக்கு உலகளவில் ரசிகர்களை பெற்றுத்தந்தது.
தற்போது நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைப்பருவ புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்பதிவில், எனக்கு கேமரா என்றாலே பயம். அந்த லென்ஸ் மிக ஆழமாக என்னைக்குறி வைக்கும் போது நான் அழுவதை நிறுத்தவில்லை. சில, பல முயற்சிகளுக்கு பிறகு நான் அங்கே தைரியமாக நின்றேன். அந்த சிரிப்பு அங்கே எப்படி வந்தது ? நான் ஏமாற்றப்பட்டேன்... நான் சிரித்தால் ஜெம்ஸ் சாக்லெட் வரும் என்றார்கள் என்று நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை பார்வதி விரைவில் தமிழில் படம் செய்ய வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் திரை விரும்பிகள்.