சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய வீடீயோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.மீனா வீட்டில் கொடுத்த பைக்கை ஜீவா திரும்ப கொடுத்துவிட்டு வருகிறார்.இதனால் மீனா ஜீவாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.ஆத்திரமடையும் ஜீவா மீனாவை நடிக்கப்போகிறார்.