2016-ல் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா,ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் pelli choopulu.தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கெளதம் மேனன் 2016-ல் கைப்பற்றி அவரே தயாரித்து வெளியிட திட்டமிட்டிருந்தார்.
பொன் ஒன்று கண்டேன் என்று பெயரிடப்பட்டிருந்த இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாகவும் நடிக்கவிருந்தனர்.பின்னர் சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டு,ரீமேக் உரிமையும் கைமாற்றப்பட்டது.A Studios LLP, A Havish Production, SP Cinemas, Madhav Media and Third Eye Entertainment இணைந்து இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றனர்.
இந்த படம் புதிய குழுவோடு தொடங்கி படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.அறி
ஓ மணப்பெண்ணே என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகின்றன.
#OhManaPenne | Harish Kalyan, Priya Bhavani Shankar.
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 17, 2021
Tamil remake of Telugu hit “Pelli Choopulu”. pic.twitter.com/CNzYWN6B8k