தென்னிந்திய சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக எண்ணற்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் நிழல்கள் ரவி அவர்கள் அட்டகாசமான டப்பிங் கலைஞராகவும் பல்வேறு படங்களில் தனது சிம்ம குரலால் ரசிகர்களை மகிழ்வித்தவர். அந்த வகையில் கேஜிஎப் திரைப்படத்தில் கன்னட நடிகர் அனந்த் நாக் அவர்களுக்கு நிழல்கள் ரவி அவர்கள் கொடுத்த டப்பிங் அந்த திரைப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று தமிழில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த நடிகர் நிழல்கள் ரவி அவர்கள், “கே ஜி எஃப் திரைப்படத்தின் வாய்ப்பு தனக்கு எப்படி வந்தது” என்பது குறித்து மனம் திறந்த நிழல்கள் ரவி அவர்கள் பேசும்போது, “நான் அப்போது விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பில் இருந்தேன் ஒரு தெலுங்கு படத்திற்கான படப்பிடிப்பில், அப்போது அசோக் என்பவர் போன் செய்தார். மாலை வேளையில் கடற்கரையில் அமர்ந்திருந்தேன் அப்போது போன் வருகிறது. அப்போது, “சார் கே ஜி எஃப் என்று ஒரு படம்” என்றார். “கோலார் கோல்டு ஃபீல்டா” என்று கேட்டேன். “ஆமாம் சார்” என்றார். “அதற்கு உங்களுடைய குரல் வேண்டும்” என்றார். “எங்க சார் நான் இப்போது படப்பிடிப்பில் இருக்கிறேன் இன்னும் 15 நாட்கள் ஆகும் போலிருக்கிறது” என்றேன். “இல்லை சார் நாங்கள் ஃப்லைட் டிக்கெட் போடுகிறோம். ஒரு பாதி நாள் மட்டும் வந்து பேசிவிட்டு போய்விடுங்கள்” என்றார்கள். போய், “பாம்பேவில் இப்படி தான் ஒரு தடவை 36,000 பேர்” என சாதாரணமாக படிக்கிறேன். உடனே அங்கிருந்து அனுப்பி கேட்டார்கள் ப்ரொடியூசர் அங்கிருந்து பேசுகிறார். “சார் நீங்கள் தான் பேச வேண்டும் நீங்களே பேசி விடுங்கள் இந்த குரல் தான் எங்களுக்கு வேண்டும் இதைத்தான் இத்தனை நாளாக நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்” என்றார்கள். நான் அசோக்கிடம் “என்ன அசோக் இது” என்று கேட்டேன். ஏனென்றால் அசோக் தான் இதை கண்டு பிடித்தார். அப்போது அசோக்கிடம் கேட்டேன் “என்ன அசோக் எப்படி திடீரென்று என் ஞாபகம் வந்தது?” என கேட்டேன். அப்போது அசோக் சொன்னார், “இல்லை சார் இந்த குரலுக்காக ஒரு வாரமாக தேடிக் கொண்டிருந்தேன் எதுவுமே கிடைக்காமல் பேசாமல் இந்த ப்ராஜெக்ட்டை விட்டு விடுவோமா என்று மிகுந்த விரக்தியில் இருந்தேன். அப்போது என்னுடைய மனைவி சினிமாவிற்கு போகலாம் என என்னை அழைத்துச் சென்றார் நான் வேண்டா வெறுப்பாக சென்றேன். உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்து கண்மூடி இருந்த போது ஒரு அரசாங்க விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் உங்களுடைய குரலை கேட்டேன். இதுதான் எனக்கு வேண்டியது எனது தோன்றியது. அவர்களை படம் பார்க்க சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து நான் கிளம்பி வெளியில் வந்து உங்களுக்கு போன் செய்தேன்.” என்றார். அப்படி வந்ததுதான். ஆனால் உண்மையிலேயே மிகவும் அட்டகாசமாக இருந்தது. அதை கொடுக்கும்போது எனக்கு தெரியவில்லை நான் கொடுத்தது அந்த கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டுமோ அந்த அளவிற்கு தான் கொடுத்தேன். ஆனால் இந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நிழல்கள் ரவி அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.