2015-ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரேமம்.மலையாளம் சினிமாவின் காதல் படங்களுக்கு ஒரு புது விளக்கம் கொடுத்த படம்.என்னதான் நம்ம சேரனின் ஆட்டோகிராப் போல படம் இருந்தாலும் படத்தில் ஒரு உயிர் இருந்தது.மலையாளம் சினிமாவின் பக்கம் அதிக தமிழ் ரசிகர்களை ஈர்த்த படம்.சென்னையில் 200 நாட்களை தாண்டி ஓடிய மலையாள படம் என்று பல சாதனைகளை இந்த படம் பெற்றுள்ளது.அப்படி பிரேமம் மீது நம் மக்களுக்கு அப்படி என்ன அதீத காதல் என்பதை பார்க்கலாம்

பிரேமம் படத்தின் கதை தான் நம் நாட்டில் இருக்கும் பாதி இளைஞர்களின் கதையாக இருந்திருக்கும்.ஸ்கூல் படிக்கும் போது ஒரு பெண்ணின் பின்னால் சுற்றி திரிந்து , அவளது தந்தையிடம் மாட்டிக்கொள்வது.நம்முடன் எப்போதும் இருக்கும் அந்த இரண்டு நண்பர்கள்,பள்ளிப்பருவ காதல் தோல்வி பின்னர் மீண்டும் காலேஜில் காதல் அதுவும் தோல்வி என்றாலும் இவை அனைத்தையும் தாண்டி ஒரு வாழ்க்கை உள்ளது என்று உணர்த்திய படம்.

பிரேமம் என்று சொன்னால் முதலில் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மலர் டீச்சர் தான்.பிரேமம் படத்தில் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டதும்,கொண்டாடப்பட்டதும் இந்த காதல் கதை தான்.மலர் டீச்சராக சாய் பல்லவி அனைவரது மனதையும் கொள்ளையடித்துவிட்டார்.நிவின் பாலி சாய் பல்லவியை டீச்சர் என்று தெரியாமல் ராகிங் செய்வது.அதற்கு சாய் பல்லவி சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன் என்று சொல்வதும்,நாளைக்கு எதாவது பிரச்சனைனா இவங்க தான் காப்பாத்துங்க என்று பிற மாணவிகளிடம் அவர் சொல்லும் வசங்களிலேயே நம் இதயத்தில் இணைந்துவிட்டார் மலர்.

அதுவரை அமைதியான டீச்சராக இருந்த சாய்பல்லவி நிவின் பாலிக்கு டான்ஸ் கற்றுத்தரும் சீனில் நடனத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.எப்படி நிவின் பாலி தனது நண்பர்களுடன் வாயை பிளந்து பார்ப்பாரோ அப்படி தான் நாமும் அந்த சீனை பார்த்தோம்.சாய் பல்லவி மட்டும் அல்லது அனுபமா பரமேஸ்வரன்,மடோனா செபாஸ்டின் உள்ளிட்ட 3 நாயகிகளை நமக்கு கொடுத்தது பிரேமம்.இந்த படத்தின் மூலம் பிரபலமான மற்றோன்று ரெட் வெல்வெட் கேக்.பிரேமம் படத்திற்கு பிறகு தான் பலரும் நிவின் பாலி போல தாடி வளர்த்துக்கொண்டு இருந்தனர்.

நிவின் பாலி ஜார்ஜ் என்ற பாத்திரத்திற்கு அப்படியே பொருந்திப்போயிருப்பார்.மாஸ் சீன் என்றாலும்,காதல் காட்சி என்றாலும்,எமோஷனல் காட்சி என்றாலும் எல்லாவற்றிலும் அடித்து நொறுக்கியிருப்பார்.ஆனால் முதலில் இந்த படத்தில் துல்கர் சல்மானை தான் நடிக்கவைக்க படகுழுவினர் யோசித்திருந்தாக தெரிவித்தனர்.நிவின் மற்றும் நாயகிகளின் கேரக்டரால் மட்டும் இந்த படம் பெரிதாக பேசப்படவில்லை.மலரிடம் ப்ரொபோஸ் செய்ய முயற்சி செய்யும் ஜாவா professor,அவருக்கு ஐடியா கொடுப்பதாக அவரை ஏமாற்றி சாப்பிடும் பிடி வாத்தியார் ,பெண்களை சைட் அடிக்கும் பியூன் என்று ஒவ்வொரு கேரக்டரும் அவ்வளவு அழகாக அமைந்திருக்கும்.இயக்குனர் அல்போன்ஸிற்கு ஏற்றவாறு ராஜேஷ் முருகேசனின் இசையும் இருக்க எப்போது வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கும் படமாக பிரேமம் இருக்கிறது.

பலரது வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே பிரேமம் இருந்துள்ளது.இதனால் தான் இந்த படத்தின் வெற்றியை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இப்போதும் இந்த படத்தை யாராவது ரீமேக் செய்ய பேசினால் முதலில் மீம் போட்டு அவர்களை ஆப் பண்ணி விடுகிறார்கள் நமது நெட்டிசன்கள்.பிரேமம் போன்ற மேலும் ஒரு அழகான படத்தோடு அல்போன்ஸ் விரைவில் வருவார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.