கன்னட சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான யஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 1 திரைப்படம் இந்திய திரை உலகத்தையே அதிர வைத்தது. கே ஜி எஃப்-1 இமாலய வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
பல கோடி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்திய பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை சரித்திரம் படைத்து வருகிறது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்துள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தை ரிப்பீட் மோடில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் சவுண்ட் தொழில்நுட்பத்தில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்களுக்கும் திரையரங்குகளுக்கும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட சவுண்ட் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக தற்போது புதிய சவுண்ட் தொழில்நுட்பத்தில் ஆடியோ வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெளிவான அறிக்கையும் தற்போது வெளியானது. அந்த அறிக்கை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
Jus to clarify . This new sound package for #KGF2 applies only for the Telugu version.
— Rakesh Gowthaman (@VettriTheatres) April 20, 2022
Also this movie is mixed is 5.1 only as preferred by the composer @RaviBasrur and not Dolby Atmos … pic.twitter.com/QyZ0I5YDZS