செல்வராகவன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தை படக்குழு மார்ச் 5ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது.
ஏற்கனவே படத்தின் 4 ட்ரைலர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. Psychological Thriller கதைகளத்தை கொண்ட படமென்பதால் 4 ட்ரைலர்களும் பார்க்கும் போதெல்லாம் எதிர்பார்ப்பை கிளப்பி கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி யுவனின் இசையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்து மார்ச் 5 என அறிவித்தது. மேலும் ரசிகர்களுக்காக 2 நாட்களுக்கு முன் ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டது. ஸ்னீக் பீக் காட்சியில் S.J. சூர்யாவின் ஸ்க்ரீன் பிரசன்ஸ், வசனங்கள் ரசிகர்களை மீண்டும் மெருக்கேற்றியது.
பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்தை தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மறுபடியும் முதலில் இருந்தா என ரசிகர்கள் மத்தியில் சோகம் நிலவியது.
இந்த முறை இழுத்தடிக்காமல் படக்குழு கடன் தொகையை உடனே திருப்பி வழங்கி படத்தினை காப்பற்றியுள்ளது. முன்னர் அறிவித்தது போல நெஞ்சம் மறப்பதில்லை மார்ச் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. அன்று இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீடாக அமைந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. எஸ்.ஜே.சூர்யா தற்போது கடமையை செய் என்ற படத்தில் நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா கைவசம் மாநாடு திரைப்படம் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்த படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
Promo 2 #NenjamMarappathillai from tomorrow @selvaraghavan @Madan2791 @iam_SJSuryah @ReginaCassandra @Rockfortent @Nanditasweta @Arvindkrsna @editor_prasanna @kbsriram16 @APVMaran @RIAZtheboss @teamaimpr pic.twitter.com/1VC9uOYpOe
— Team Aim (@teamaimpr) March 4, 2021