ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படம் தற்போது வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. முதல் முறை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெளிவந்திருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படம் முதல் வார இறுதியில் 375.40 கோடி வரை வசூலித்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது ஜெயிலர் பட குழுவினர் இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த விழாவில் பேசிய இயக்குனர் நெல்சன்,

"என்னுடைய அணி... நடிகர்கள் பலருக்கும் பல இடங்களில் நன்றிகள் சொல்லிவிட்டேன் ஆனால் டெக்னீசியன்களுக்கு அவ்வளவு நிறைய நன்றிகள் சொல்லவில்லை. முதலில் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் என்னதான் ரஜினி சார் ரசிகராக இருந்தாலும் சில நேரங்களில் எங்கேயாவது ஏதாவது நம்பற மாதிரி இல்லை என்றால் அதை முதலில் சொல்வது அவர்தான் படத்தில் கூட சேர்ந்து ஒரு உதவி இயக்குனர் எப்படி வேலை செய்வாரோ அப்படி இறங்கி வேலை செய்வார். நன்றி விஜய்.. அடுத்து படத்தொகுப்பாளர் நிர்மல் இந்தப் படத்தில் எனக்குத் தெரிந்து அதிக நேரம் வேலை செய்தது நிர்மல் ஆக தான் இருக்கும். ஏனென்றால் படம் ஆரம்பித்ததில் இருந்து அன்றைய நாள் படப்பிடிப்பு முதல் ரிலீஸ் என்று காலை வரை ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நன்றி நிர்மல்! அடுத்து கலை இயக்குனர் கிரண்.. கிரண் எப்படி என்றால் அவர் ஒரு பன்முகத்தன்மை கொண்டவர் திடீரென்று பார்த்தால் ஒருபுறம் நடித்துக் கொண்டிருப்பார் வேறு ஒரு இடத்தில் போட்டியாளராக இருப்பார் கூடுதலாக கலை இயக்கமும் பார்ட் டைமாக செய்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு கேட்டார் உங்கள் திறமையை முழுக்க கலை இயக்கத்தில் காட்டுங்கள் இவ்வளவு பெரிய படத்தில் கலை இயக்குனர் நீங்கள் என்ன நடிக்க வாய்ப்பு கேட்கிறீர்கள் என்று சொன்னேன். நிறைய செட்களில் தான் பணியாற்றி இருக்கிறோம் ஆனால் பார்ப்பதற்கு மிகவும் லைவ் லொகேஷன் மாதிரி இருக்கிறது. நன்றி கிரண்.. அடுத்து ஸ்டண்ட் சிவா மாஸ்டர்… மாஸ்டர் என்னை கோலமாவு கோகிலா படத்திலிருந்து பின் தொடர்கிறார். அப்போது எனக்கு தெரியாது சார் என்னென்ன படங்கள் பண்ணியிருக்கிறார் என்று, இயக்குனர் பாலா அவர்களின் முதல் மூன்று படங்களுக்கு பணியாற்றுகிறார் பின்னர் கௌதம் சாருடன் பணியாற்றி இருக்கிறார். நிறைய ஆல் டைம் கிளாசிக் படங்களில் பணியாற்றி இருக்கிறார் அதெல்லாம் பார்த்து தான் அவரோடு இணைந்து பணியாற்றினேன். வரும்போது அவரை விட பயங்கரமாக இரண்டு பேரை அழைத்து வந்தார் அவர்கள் இருவரும் அவரது மகன்கள். அவர்களுடைய ஐடியாக்களை என் மீது திணிக்க மாட்டார்கள் எனக்கு என்ன தேவையோ அதை மட்டுமே மிகச் சரியாக செய்வார்கள். ஒருவேளை ஏதாவது வேண்டாம் என எனக்கு தோன்றியது என்றால் நான் சொல்வதற்குள் அதை நிறுத்தி விடுவார்கள். நன்றி மாஸ்டர்!!”

என தெரிவித்தார். ஜெயிலர் திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் இயக்குனர் நெல்சன் பேசிய அந்த முழு வீடியோ இதோ…