எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் வேற லெவல் வரவேற்புடன் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் என தனக்கென தனி பாணியில் பக்கா டார்க் காமெடி மற்றும் ஆக்சன் கலந்த என்டர்டெய்னிங் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அடுத்த செம்ம ட்ரீட்டாக வந்திருக்கிறது ஜெயிலர் திரைப்படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் கடைசியாக வந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரஜினி ரசிகர்களை அவ்வளவு பெரிதாக திருப்தி படுத்தாத நிலையில் இந்த ஜெயிலில் ஒரு திரைப்படம் மிகவும் ரசிக்கும்படியாக இருப்பதாக திரையரங்குகளில் ரசிகர்கள் ரிப்பீட் மோட்டில் கொண்டாடி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குனர் நெல்சனின் டார்க் காமெடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் ஆக்சன் இவை அனைத்தையும் அனிருத் தனது பின்னணி இசையாலும் பாடல்களாலும் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸானது. ரிலீசான நான்கு நாட்களில் வெளிநாடுகளில் மட்டுமே 105 கோடி வரை ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வசூலித்தது. உலக அளவில் முதல் வார முடிவில் ஜெயிலர் திரைப்படம் 375.40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த மெகா வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயிலர் பட குழுவினர் தற்போது நன்று தெரிவிக்கும் விழா ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த விழாவில் பேசிய இயக்குனர் நெல்சன்,

“ஜெயிலர் பற்றி இசை வெளியீட்டு விழா மற்றும் சில பேட்டிகளில் நிறைய சொல்லிவிட்டோம் அவை எல்லாமே நாம் படம் ரிலீஸுக்கு முன்பு பேசியது இந்த படம் இப்போது இவ்வளவு பெரிய ஹிட் ஆகியிருக்கிறது. ஆனால் இந்த படம் ஆரம்பிக்கும் போது இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என நினைத்து பண்ண வில்லை படம் நன்றாக வர வேண்டும் என்பது மட்டும்தான் இருந்தது. இந்த படம் இப்போது அடைந்திருக்கும் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்த ஸ்கிரிப்ட்டை விட, ரஜினி சார்.. அவருடைய பவர்.., அந்த ஆரா.., அவருடைய அந்த ஸ்வாக் மற்றும் அவரது ரசிகர்கள் தான். அதற்காக அவரது ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி எல்லா பார்வையாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி!"

என தெரிவித்தார். ஜெயிலர் திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் இயக்குனர் நெல்சன் பேசிய அந்த முழு வீடியோ இதோ…