தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அறம்,கோலமாவு கோகிலா என ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.இதனை தொடர்ந்து நயன்தாரா நாயகியாக நடிக்கும் படம் நெற்றிக்கண்.இந்த படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவு இயக்குகிறார்.
இந்த படத்தை ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அஞ்சாதே,கோ உள்ளிட்ட படங்களில் நடித்த அஜ்மல் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.