பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் அந்தாதூன். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அந்தகன் என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இயக்குனர் ஜேஜே பெடரிக் என்பவர் இயக்க இருப்பதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்திக் மற்றும் சிம்ரன் உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதன் பின் நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்காக பியானோ பயிற்சியில் பிரசாந்த் ஈடுபட்டாராம். மாரி சக்தி என்ற பியானோ கலைஞர் பிரசாந்திற்கு ட்ரைனிங் தந்துள்ளார். படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், மனோபாலா, பிரியா ஆனந்த் நவரச நாயகன் கார்த்திக், யோகிபாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் ஆகியோர் நடிக்கின்றனர்.

அந்தகன் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இன்று டாப் ஸ்டார் பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.

இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி அந்தகன் படத்தில் இணைந்த தகவல் கடைசியாக வெளியாகியுள்ளது. அந்தகன் படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் தெரியவந்தது.

இதுவரை படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், சென்னை மற்றும் புதுச்சேரியில் எடுக்க வேண்டிய சில காட்சிகள் மட்டுமே இன்னும் பாக்கியிருப்பதாகவும் தகவல் தெரியவந்தது. இந்நிலையில் நவரச நாயகன் கார்த்திக் படத்தில் இணைந்துள்ளார். படக்குழுவுடன் அவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில நாட்கள் முன்பு நடிகர் கார்த்திக் உடல் நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகி இருந்தார். தற்போது அவர் படப்பிடிப்பில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.