தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு (2021) வெளிவந்த அகாண்டா திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதனையடுத்து தொடர்ந்து நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் இயக்குனர் கோபிசந்த் மலினேணி இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்துவரும் திரைப்படம் #NBK107. தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் #NBK107 திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் வரலட்சுமி சரத்குமார், துனியா விஜய், R.ரவிசங்கர், ஹனி ரோஸ், லால் மற்றும் சந்திரிகா ரவி ஆகியோர் #NBK107 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்யும் #NBK107 திரைப்படத்திற்கு S.தமன் இசையமைக்கிறார்.
அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் சங்கராந்தி வெளியீடாக NBK107 திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த NBK107 திரைப்படத்தின் டைட்டில் தற்போது வெளியானது. NBK107 திரைப்படத்திற்கு “வீர சிம்ஹா ரெட்டி” என பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
My LOVE for GOD OF MASSES ❤️🔥
— Gopichandh Malineni (@megopichand) October 21, 2022
Presenting,
NATASIMHAM #NandamuriBalakrishna in & as 'VEERA SIMHA REDDY' ❤️🔥
సంక్రాంతికి కలుద్దాం! 🔥#VeeraSimhaReddy#వీరసింహారెడ్డి
💥💥💥#NBK107 @shrutihaasan @OfficialViji @varusarath5 @MusicThaman @MythriOfficial @SonyMusicSouth pic.twitter.com/8r9h90jag0