பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.



ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய வீடீயோவை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.கார்த்திக்குடன் மருத்துவமனையில் இருக்கும் ஜோதியை பொய் சொல்லி திவ்யா அனுப்பிவைக்கிறார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

#JyothiIsFooled #Naachiyarpuram #ZEEONTHEGO #ZeeTamil @rachitha_mahalakshmi_official @dinesh_srivi

A post shared by zeetamil (@zeetamizh) on