சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் முக்கிய வேடங்களில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.
கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து ஷூட்டிங்குகள் தொடங்கின.ஆனால் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் ஹீரோயின்கள் மாற்றப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.தற்போது இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த தொடரின் நாயகிகளில் ஒருவரான ரக்ஷா பிரபல வார இதழான விகடனுக்கு அளித்த பேட்டியில் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.அதில் தான் பெங்களூரில் இருப்பதாகவும்,தன்னை சீரியல் குழுவினர் தொடர்பு கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.ஆனால் சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் அதிகளவு கொரோனா பரவல் இருந்ததால் அவரது வீட்டில் இருப்பவர்கள் அவரை ஷூட்டிங்கிற்கு அனுப்ப அச்சப்பட்ட்டனர் என்று தெரிவித்தார்.மேலும் சென்னையில் இருந்திருந்தால் நிச்சயம் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருப்பேன் என்று தெரிவித்தார்.இதனால் தன் வீட்டில் இருப்பவர்களை சமாதானப்படுத்தி ஷூட்டிங் வருவதற்கு இன்னும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து தன்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை என்று தெரிவித்த ரக்ஷா.இதே நிலைமை தான் மற்றறொரு ஹீரோயின் ராஷ்மிக்கும் அவரும் பெங்களூரில் தான் உள்ளார் என்று தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன் சீரியலில் தன்னுடன் வேலைபார்த்த சிலரின் மூலம் இந்த தொடரை அப்படியே நிறுத்திவிட்டு ,புதிய கதை கொண்டு அடுத்த சீசன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளனர் என்ற தகவல் தனக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து யாரும் தன்னிடம் எந்த ஒரு அறிவிப்பும் அளிக்காதது தனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.ராஷ்மியும் இந்த புதிய தொடரில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக டபிள் ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறார் என்றும்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவலும் தனக்கு கிடைத்துள்ளது என்ற தகவலையும் ரக்ஷா தெரிவித்துள்ளார்.புதிய சீசன் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் ரக்ஷா.இந்த சீரியலில் இப்படி திடீரென ஹீரோயின்களை மாற்றியது அந்த சீரியல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.