கன்னட சீரியல்களின் மூலம் சின்னத்திரைக்குள் என்ட்ரி தந்தவர் ராஷ்மி ஜெயராஜ்.கன்னட சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த ராஷ்மி , சன் டிவியில் ஒளிபரப்பான விதி என்ற சீரியலின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் ஒரு ஹீரோயினாக நடித்து அசத்தினார் ராஷ்மி.
இந்த தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் ராஷ்மி ஜெயராஜ்.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து கன்னடத்தில் தேவயானி,தமிழில் செல்வமகள் தொடரில் நடித்தார் ராஷ்மி.
ராஷ்மி ஜெயராஜ் ரிச்சு ஜேக்கப் என்பவரை 2021 பிப்ரவரியில் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்துக்கு பிறகு விஜய் டிவியில் ரீ என்ட்ரி கொடுத்த இவர் ராஜபார்வை என்ற தொடரில் நடித்து அசத்தி வந்தார்.இந்த தொடர் சமீபத்தில் நிறைவுக்கு வந்தது.
தான் கர்பமாக இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை ரசிகர்களுடன் சில மாதங்களுக்கு முன் பகிர்ந்துகொண்டார் ராஷ்மி.இவரின் வளைகாப்பு நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் கோலாகலமாக நடந்தது.தற்போது தனது புதிய கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.