சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய வீடியோவை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.மீண்டும் வீட்டுக்கு திரும்பும் மாயன் தேவியிடம் சாப்பாடு வேண்டும் என்று கேட்கிறார்.கடுப்பான தேவி மாயனை வழக்கம்போல திட்டுகிறார்.
சொன்னோம்ல.. சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாதுனு! 🤪
— Vijay Television (@vijaytelevision) March 18, 2020
நாம் இருவர் நமக்கு இருவர் - இன்று மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NINI #MaayanDevi #VijayTelevision pic.twitter.com/PLMnB75hC2