தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய D.இமான் சமீபத்தில்(2022) சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரை தனது திரை இசை பயணத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
மனதை மயக்கும் மெலடி பாடல்களாக இருந்தாலும் சரி, கேட்டவுடன் குத்தாட்டம் போட வைக்கும் FOLK பாடல்களாக இருந்தாலும் சரி, தனக்கே உரித்தான பாணியில் தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் பல சூப்பர் ஹிட் பாடல்களை தொடர்ச்சியாக கொடுத்து வருபவர் D.இமான். தளபதி விஜய், அஜித் குமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி என முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவரின் படத்திற்கும் இசையமைத்துள்ள D.இமான் கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆர்யாவின் கேப்டன், சசிகுமாரின் காரி, பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை மற்றும் மை டியர் பூதம் என அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் D.இமான் இசை மழையில் ரசிகர்களை நனைய வைக்க காத்திருக்கின்றன. சிறந்த இசையமைப்பாளரான D.இமான் வளர்ந்து வரும் இசைக் கலைஞர்களையும், சூப்பர் சிங்கரில் இருந்தும், சாமானிய மக்கள் இடத்திலிருந்தும் சிறந்தத் திறமைகளை தேர்ந்தெடுத்து வாய்ப்பு கொடுத்து புது வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளார்.
சினிமா மற்றும் இசை பிரியர்கள் அனைவரும் தற்போது D.இமானின் 20 வருட திரைப்பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் D.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது இந்தத் திரை இசைப்பயணத்தில் தக்க உறுதுணையாக இருந்த இசைப் பிரியர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்-நடிகைகள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக துறையினர் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் கொடுத்த உத்வேகமும் ஊக்குவிப்பும் தான் இத்துறையில் 20 ஆண்டுகள் எனும் வெற்றிகரமான இலக்கை கடக்க உதவியது. கடவுளுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
My sincere gratitude to Music lovers,Producers,Directors,Actors,Singers,Lyricists,Instrumentalists,Press and Media for being so supportive in my Film music journey.
— D.IMMAN (@immancomposer) April 12, 2022
Your words of encouragement made me to cross the successful 20yrs mark in this field!#20YearsOfImman
Glory to God! pic.twitter.com/pLpf6FPxm0