தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர் ஏ. எல். ராகவன். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை எம். என். ராஜம் ஆவார். ஏ. எல். ராகவன் எங்கிருந்தாலும் வாழ்க, சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர். தனது குரலால் கோடிக்கனக்கான ரசிகர்களை ஈர்த்தவர்.

.

இன்று காலை 7:30 மணியளவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் ஏ.எல். ராகவன். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்செய்தி அறிந்த திரைத்துறையினர் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் உள்ளனர்.

.

சிறந்த பாடகரான ஏ.எல். ராகவன் சீரான நடிகரும் கூட. அலைகள், அகல்யா போன்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், பல திரைப்பிரபலங்களின் இறப்பு செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறைவனை தனது இசையால் ஈர்க்க சென்றுள்ள பாடகர் ஏ.எல். ராகவனின் குடும்பத்தினருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

.