இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘மாநகரம்’ புகழ் நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மைக்கேல்’ அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் ரத்தம் வடியும் படத்தின் டீசரை படக்குழு முன்னதாக வெளியிட்டது. இதில் கெத்தான தோற்றத்தில் விஜய் சேதுபதி டீசரில் தோன்றி ரசிகர்களை ஆரவாரத்திற்கு உள்ளாக்கினார். மேலும் விஜய் சேதுபதி, சந்தீப் கிஷனுடன் வரலக்ஷ்மி சரத்குமார், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனேன், திவ்யான்ஷா கௌஷிக், அனுசுயா பரத்வாஜ், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் டிரெய்லர் வரும் ஜனவரி 21-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விறுவிறுப்பாக நடைபெற்ற மைக்கேல் படத்தின் படபிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்துள்ளது. துப்பாக்கி ஏந்தி சந்தீப் கிஷன் படக்குழுவினருடன் படத்திற்கான வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இதனையடுத்து கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய சினிமாவில் தற்போது கவனிக்கதக்க நடிகர்களில் ஒருவராக உள்ள விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்துள்ளதையடுத்து அவரது பிறந்த நாளை கொண்டாடும் விததத்தில் மைக்கேல் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கான பிரத்யேக காட்சியை படக்குழு வெளியிட்டது. அதனுடன் “தனது நடிப்பினால் திரையைமெருகேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு மைக்கேல் திரைப்பட குழு சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்”என்று குறிப்பிட்டிருந்தனர்.
Team #Michael wishes the Actor, who redefined screen presence with his performances, The Makkalselvan @VijaySethuOffl a Very Happy Birthday ❤️🔥#HBDVijaySethupathi
— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) January 16, 2023
Theatrical Trailer on Jan 21st 👊🏾@sundeepkishan @Divyanshaaaaaa @jeranjit @SVCLLP @KaranCoffl @adityamusic pic.twitter.com/ATCLrviqkZ
பார்வையில் மிரட்டும் விஜய் சேதுபதியின் புதிய தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தற்போது படக்குழு வெளியிட்ட வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து மைக்கேல் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற தகவலே சமீபத்தில் பல படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டிவிடும், அப்படிதான் அவர் குணசித்திர வேடத்திலும் வில்லன் பாத்திரத்திலும் நடிக்கும் படங்களின் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகரிக்கும். அவர் தேர்ந்தெடுக்கும் படங்களில் அவரது தோற்றத்திற்காகவும் அவரது நடிப்பிற்காகவும் ஜனரஞ்சகமாக ரசிகர்கள் பெருமளவு உள்ளனர். அதன்படி கதாநயகனாக நடித்ததை தவிர்த்து அவர் வில்லனாக தோன்றிய படங்களுக்கு தனி சிறப்பு இவரால் கிடைத்துள்ளது. ‘பேட்ட’, ‘விக்ரம் வேதா’, ‘விக்ரம்’, ‘மாஸ்டர்’. அதன் படி வில்லதனாமாக அவர் மிரட்டிய படங்களின் வரிசையில் மைக்கேல் படம் இடம் பெற்றுள்ளதால் இந்த படத்திற்கும் ஒரு தனி எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.