தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராகவும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் திகழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் நடித்துள்ள போலா ஷங்கர் திரைப்படத்தின் டீசர் எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. தனக்கென தனி பாணியில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை போல் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தொடர்ந்து தனது அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் நடிப்பில் கடந்த (2022) ஆண்டில் ஆச்சாரியா மற்றும் காட்ஃபாதர் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. தனது மகனும் நடிகருமான ராம்சரண் உடன் இணைந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ஆச்சாரியா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கான மிகப்பெரிய வெற்றியை பெற தவறிய போதும் காட்ஃபாதர் சிரஞ்சீவிக்கு கைகொடுத்தது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த காட்ஃபாதர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் வெளியீடாக சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த வால்டர் வீரய்யா திரைப்படம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனது.
அடுத்தடுத்து மாஸ் வெற்றி படங்களை கொடுக்கும் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் இன்னும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிரஞ்சீவி நடிப்பில் அடுத்த வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் போலா ஷங்கர். தமிழில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான அஜித் குமாரின் வேதாளம் திரைப்படத்தின் நேரடி தெலுங்கு ரீமேக்காக போலா ஷங்கர் திரைப்படம் தயாராகி இருக்கிறது. கதையின் நாயகனாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, கதாநாயகியாக தமன்னா நடித்திருக்கிறார். மேலும் ரகு பாபு, முரளி ஷர்மா, ரவிசங்கர், வெண்ணலா கிஷோர், கிஷாந்த், துளசி, ஸ்ரீமுகி, சத்யா, ரஷ்மி கௌதம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
ஏ கே என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் கிரியேட்டிவ் கமர்சியல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள போலா ஷங்கர் திரைப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்ய மார்த்தாண்ட் . கே. வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். மகதி ஸ்வரா சாகர் இசையமைத்து இருக்கிறார். முன்னதாக இந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி யுகாதி வெளியீடாக போலோ ஷங்கர் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. பின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடும் போலா ஷங்கர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போலா ஷங்கர் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. சிரஞ்சீவியின் செம்ம ஸ்டைலில் பக்கா மாஸாக வந்துள்ள போலா ஷங்கர் பட ட்ரெய்லர் சோசியல் மீடியாவை அதிரவைத்துள்ளது. அதிரடியான அந்த போலா ஷங்கர் பட டீசர் இதோ…