போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். விஜய் சேதுபதி வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தை துவங்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தா நாயகிகளாக நடிக்கின்றனர். லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் ஒரு ரொமான்டிக் பாடலை எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். அனிருத் இசையில் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ஈர்த்து வருகிறது.
மார்ச் 15-ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. தளபதியின் குட்டி கதை கலந்த மேடை பேச்சுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.