கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். இதனைத்தொடர்ந்து தற்போது தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.
தற்போது மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவான இயக்குனர் ரத்னகுமார் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விமானத்தில் அமர்ந்திருக்கும் இருவரும் சிரித்தபடி உள்ள இந்த வீடியோ திரை ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வீடியோவை பார்க்கையில் லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோ போல் தெரிகிறது. ஒருவேளை மாஸ்டர் ஷூட்டிங்கிற்காக செல்லும் போது எடுக்கப்பட்டதா இருக்குமோ ? என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.குறும்பட காலத்திலிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. உச்சம் தொட்ட இயக்குனர்களாக இருந்தாலும், மாமன் மச்சான் உறவான நட்பு மாறாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த வீடியோ.
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் படம் மாஸ்டர். அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது.
ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை.
மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, சமீபத்தில் படத்தின் ரிலீஸ் குறித்து பேசியிருந்தார். மாஸ்டர் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், என்ன நடந்தாலும் அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்பதை தெரிவித்திருந்தார்.
கொரோனா லாக்டவுன் பிரச்சனையை பொறுத்தே படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும், அது பொங்கலுக்கா அல்லது தீபாவளிக்கா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்காகதான் படக்குழு காத்திருக்கிறது என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2 திரைப்படத்தை இயக்குவாரா ? அல்லது வேறொரு புதிய ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபடுவாரா என்ற ஆர்வத்தில் உள்ளனர் திரை விரும்பிகள்.
#Thalapathy fans waiting for #Master update, meanwhile @Dir_Lokesh & @MrRathna 😕 pic.twitter.com/OGAIHYdVgi
— ᴛᴊ ɴɪᴅʜɪɴ ᴋᴜʀɪᴀᴋᴏꜱᴇ⚪ (@TamsterzTJ) August 3, 2020