தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்ட திரைப்படமாக வெளியகவுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் வித்யாசமான கெட்டப்பில் முதன்மை கதாபாத்திரங்களாக நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்து வருகின்றனர். இவர்களுடன் படத்தில் ரீத்து வர்மா, இயக்குனர் செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில், ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் முடித்த மார்க் ஆண்டனி படதத்தின் டீசர் இன்று மாலை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக இப்படத்தின் நாயகன் நடிகர் விஷால் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் #ThalapathyVijayForMarkantony என்ற ஹாஷ்டேக் பதிவிட்டார். இதையடுத்து அந்த ஹேஷ்டேக் இணையத்தில் வைரலானது. பின் நடிகர் விஷால் படக்குழுவினருடன் தளபதி விஜய் அவர்களை சந்தித்து மார்க் ஆண்டனி படத்தின் டீசரை காட்டி வாழ்த்துகளை பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் விஷால் அவர்களின் பதிவை எஸ் ஜே சூர்யா பகிர்ந்து தளபதி விஜய் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். அந்த பதிவில் ரசிகர் ஒருவர் “தலைவரே நீங்க ஏன் போகல” என்று எஸ் ஜே சூர்யா அவர்களை கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த எஸ்ஜே சூர்யா “அப்போது நான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கான படப்பிடிப்பில் இருந்தேன்” என்று விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Was shooting for JigarThanda2 bro

— S J Suryah (@iam_SJSuryah) April 27, 2023

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்தின் அடுத்த பாகமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற பெயரில் தற்போது படமாகி வருகிறது. வேறு ஒரு கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ராகவா லாரான்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான அப்டேட் சிறப்பு காட்சியாக முன்னதாக வெளியாகி மிகப்பெரிய அளவு டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.