ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியின் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான லியோ திரைப்படம் முதல் நாளிலேயே 148.75 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் மிகப்பெரிய சாதனை படைத்ததோடு முதல் வாரத்தில் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவில் வரலாற்றுச் சாதனை படைத்தது.
வசூல் ரீதியில் லியோ திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை படைத்திருந்தாலும் விமர்சன ரீதியில் சில கலவையான விமர்சனங்கள் லியோ திரைப்படத்தின் மீது மிகவும் பரவலாக வைக்கப்படுகிறது அதில் மிக முக்கியமானது படத்தில் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ் பேக். இந்த பிளாஷ்பேக்கில் தான் ரசிகர்களின் மனதை கவர்ந்த "நா ரெடி" பாடலும் வருகிறது பாடல் படமாக்கப்பட்டு இருக்கும் விதம் கொண்டாடும் வகையில் இருந்தாலும் அது படத்தில் வைக்கப்பட்டிருக்கும் இடம் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு சிறப்பு பேட்டி கொடுத்த ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவர்கள் லியோ திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், லியோ படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ் பேக் குறித்தும் நா ரெடி பாடல் குறித்தும் பேசி இருக்கிறார். அப்படி பேசுகையில்
“இந்த ஸ்கிரிப்ட் சரியாக வேலை செய்தது என்றால் இந்த கதாபாத்திரங்களை வைத்து எந்த இடத்தில் வேணாலும் எவ்வளவு படங்கள் வேணாலும் LCUவின் கீழ் செய்ய முடியும். அவ்வளவு விஷயங்கள் இதற்குள் இருக்கிறது. ஏன் அவர் (லியோ) இவ்வளவு சீற்றத்துடன் இருக்கிறார் அவருடைய அம்மாவிற்கு என்ன ஆச்சு இதுபோல் நிறைய பண்ணலாம் எதற்காக ஒரு தந்தை வந்து அவரின் சொந்த குழந்தையை பலி கொடுக்கிறார். இந்த மூடநம்பிக்கையின் காரணம் என்ன எல்லா பிரச்சனையையும் சார்ந்து நீங்கள் எளிதாக கதையை செய்ய முடியும். அதை செய்வது பெரிய ஒரு வேலை கிடையாது. இவர் ஏற்கனவே அதற்குள் வைக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை வைத்திருந்தார். எனக்குமே நிறைய சொல்லி இருந்தார்கள் ஒரு முக்கியமான காட்சி, ஒரு பெரிய காட்சி வைத்திருந்தோம். அதில் அவர்களின் BONDING பற்றி வைத்திருந்தோம். அண்ணன் தங்கையின் ஒரு BONDING. ஆனால் அது ஒரு போக்கில் போகவில்லை. எங்களுக்காக அவர் எல்லாம் செய்துவிட்டார் இவருக்காக இந்த ஒரு பாடலை கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த பிளாஷ்பேக் பாடலின் ஒரு மிகப்பெரிய காரணம் கடைசி விஷயமாக அனைவருக்கும் அவரின் (தளபதி விஜய்யின் லியோ தாஸ் கதாபாத்திரம்) இளமைப் பருவத்தில் கொண்டாட்டத்திற்காக ஒரு பாடல் கொடுக்க வேண்டும் என்று தான் இதை செய்தோம்.”
என்று தெரிவித்திருக்கிறார். இது மாதிரி தளபதி விஜயின் லியோ படம் குறித்தும் இயக்குநர் லோகேஷ் கனகராஜன் LCU குறித்தும் இதுவரை வெளிவராத பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் அந்த முழு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ட்ரெண்டிங் பேட்டியை கீழே உள்ள லிங்கை காணலாம்.