மலையாள சினிமாவின் நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை மஞ்சு வாரியர் சாக்ஷ்யம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து மலையாளத்தில் சல்லாபம், தூவல் கொட்டாரம், கழிவீடு உள்ளிட்ட படங்களில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த மஞ்சு வாரியர் கடந்த 1996 ஆம் ஆண்டு நடித்த ஈ புழவையும் கடன்னு திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து தனது முதல் ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார். தொடர்ந்து களியாட்டம், ஆறாம் தம்புரான், கண்மாடம், ஹவ் ஓல்ட் ஆர் யூ, உதாரணம் சுஜாதா, ஆமி திரைப்படங்களுக்கும் அடுத்தடுத்து சிறந்த நடிகையாக தனது ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்றார் மஞ்சு வாரியர்.
1999க்கு பிறகு தனது திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொண்ட நடிகை மஞ்சு வாரியர் பின்பு 2014 ஆம் ஆண்டு ஹவ் ஓல்ட் ஆர் யூ திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹவ் ஓல்ட் ஆர் யூ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற, அடுத்தடுத்து வரிசையாக என்னும் எப்போழும், ராணி பத்மினி, வெட்டா, ஆமீன் ஒடியன் லூசிபர் உள்ளிட்ட பல படங்களில் நடித்த மஞ்சு வாரியார் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான அசுரன் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கினார். தனது முதல் தமிழ் திரைப்படத்திலேயே சிறந்த நடிகையாக அசுரன் படத்தில் முத்திரை பதித்தார் நடிகை மஞ்சு வாரியர்.
தொடர்ந்து தி பிரீஸ்ட், சாத்தூர் முகம், மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம், ஜாக் N ஜில் உள்ளிட்ட படங்களில் நடித்த மஞ்சு வாரியார் மீண்டும் தமிழில் நடித்த திரைப்படம் துணிவு. நேர்கொண்ட பார்வை & வலிமை ஆகிய திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்த இயக்குனர் H.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவான துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் வெளிவந்த துணிவு திரைப்படம் பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரமும் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதனிடையே மலையாளம் மற்றும் அரபிக் என இரு மொழிகளில் மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான ஆயிஷா திரைப்படமும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக வெள்ளரி பட்டணம், காயட்டம் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களும் அம்ரிக்கி பண்டிட் என்னும் ஹிந்தி திரைப்படமும் மஞ்சு வாரியர் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றனர்.
முன்னதாக துணிவு திரைப்படத்தின் சமயத்தில் அஜித் குமார் அவர்களின் வழக்கமான பைக் ரைடிங்கில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டார். தொடர்ந்து அஜித்குமாரின் இன்ஸ்பிரேஷனில் பைக் ரைடிங்கில் அதிக ஆர்வம் செலுத்திய நடிகை மஞ்சு வாரியர் தற்போது புதிய பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை வாங்கி இருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் பிஎம்டபிள்யூ பைக் வாங்கிய வீடியோவை வெளியிட்டு, "என்னைப்போல் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் அஜித் குமார் சார் அவர்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார். நடிகர் மஞ்சு வாரியர் பைக் வாங்கிய அந்த வீடியோ இதோ…