வழக்கு எண் 18/9 படத்தில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதைத்தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் படங்களில் நடித்தார். சென்னை 28 இரண்டாம் இன்னிங்ஸ் படத்தில் இடம்பெற்ற சொப்பன சுந்தரி பாடல் மூலம் பிரபலமானார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியக் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கடைகளின் முன்புறம் ஆண்கள் பெண்கள் பாகுபாடின்றி நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கிச் செல்வது வருத்தத்தை அளிக்கிறது. தமிழகத்திலும் வருகிற 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் மதுபானக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மனிஷா யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், இதற்கு முன் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்பட்டதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் குறைந்தபட்சம் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி வரிசையில் நிற்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.