தமிழ் சினிமா மிகப்பெரிய ஆளுமைகளான எம் ஜி ஆர் தொடங்கி கமல் ஹாசன் வரை கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு கைவிட்டனர். பல ஆண்டுகளாக விடா முயற்சியினால் அத்தகைய பிரம்மாண்ட படைப்பினை இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்தினம் அவர்கள் கடந்த ஆண்டு சாத்தியமாக்கினார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு உலகளவில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
லைகா நிறுவனம் உடன் இணைந்து மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு பின் அப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை மிகப்பெரிய அளவில் வெளியாகவுள்ளது. இதில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி,ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், அஷ்வின், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தினை மக்கள் கடந்த சில மாதங்களாக கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முன்பதிவு இந்தியா முழுவதும் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்திற்கான இறுதிகட்ட விளம்பர பணியில் பொன்னியின் செல்வன் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது, அந்த விளம்பர பிரிவில் ஒரு பங்காக அமெரிக்காவில் ஸ்டாட்சு ஆப் லிபர்டி என்று அமெரிக்காவின் விடுதலை சிலயாகாக மிக பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் சிலை அமைந்திருக்கும் பகுதியில் சிறப்பு விமானம் கொண்டு அதன் பின் பகுதியில் “Cholas are back Lyca subaskaran presents PS 2 from 4/28 “ என்று குறிப்பிட்டு மிக பெரிய எழுத்து செய்தியை பறக்கவிட்டுள்ளனர்.
இந்த பிரம்மாண்ட விளம்பர செய்தி சிறப்பு வீடியோவாக படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதனுடன் “Hot Air Baloon, Hollywood, Sky diving, Nasdaq வரிசையில் Staute of liberty .. பொன்னியின் செல்வன் படத்தை விடுதலைகான சிலை முன்னிலையில் விளம்பரப்படுத்துவதில் நாங்கள் பெருமையாகவும் கவுரமாகவும் உணர்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து அந்த வீடியோவினை ரசிகர்கள் வியப்புடன் பகிர்ந்து வருகின்றனர்.