பிகில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மாநகரம்,கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.ராக்ஸ்டார்அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத்,மாஸ்டர் மஹேந்திரன்,பிரிகிடா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.
இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.பட்டிதொட்டி எங்கும் இந்த பாடல்கள் ஓயாது ஒளித்து வருகின்றன.இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழுவினர் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டிக்டாக் தடையை அடுத்து இன்ஸ்டாகிராமில் புதியதாக ரீல்ஸ் என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பலரும் தங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.மாளவிகா மோஹனன் இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளார்.தனது வீடியோ ஒன்றை ரீல்ஸில் பதிவிட்ட மாளவிகா மோஹனன் கொரோனா நேரத்தில் அடிக்கடி இந்த பாடலை கேட்டு வருகின்றேன் என்று மாஸ்டர் படத்தின் அந்த கண்ண பார்த்தாக்க பாடலை பதிவிட்டுள்ளார்.மேலும் மாஸ்டரில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tripping on some @anirudhofficial and my favourite song from ‘Master’ today 🥰
A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on