இந்திய சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போலே திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து மலையாளத்தில் நிர்ணாயகம், மம்மூட்டியின் தி கிரேட் ஃபாதர், கன்னடத்தில் நானும் மட்டும் வரலக்ஷ்மி ஆகிய படங்களில் நடித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கிய மாளவிகா மோகனன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த ஆண்டு (2022) வெளியான தனுஷின் மாறன் படத்திலும் நடித்த மாளவிகா மோகனன், தற்போது பாலிவுட்டில் யுத்ரா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் ஆல்வின் ஹென்ரி இயக்கத்தில் புதிய மலையாள படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத் திரையுலகில் என்ட்ரி கொடுக்கும் மாளவிகா மோகனன், உடன் இணைந்து கும்பலங்கி நைட்ஸ் பட நடிகர் மேத்யூ தாமஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
எழுத்தாளர்கள் இந்து கோபன் மற்றும் பெஞ்சமின் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இப்படத்தில் ஜாய் மேத்யூ, வினித் விஸ்வம், ராஜேஷ் மாதவன், முத்துமணி, வீணா நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் மாளவிகா மோகன் நடிக்கும் இந்த புதிய மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று செப்டம்பர் 24ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாளவிகா மோகனனின் புதிய படத்தின் படப்பூஜை புகைப்படங்கள் இதோ…
#MalavikaMohanan's untitled Malayalam movie kickstarts!!
— TheRoute (@TheRoute) September 24, 2022
So happy & excited for our @MalavikaM_'s new journey! Best wishes to the entire team!#AlvinHenrySamuel #MathewThomas #AnendCChandran #SajaiSebastain #KannanSatheesan pic.twitter.com/ZmVTikhhnb