சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் செம ஹிட் அடித்திருந்தன.மேலும் இந்த படம் TRP ரேட்டிங்களிலும் புதிய சாதனைகளை படைத்தது.2019-ல் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக நம்ம வீட்டு பிள்ளை படம் இருந்தது.இந்த படத்தின் பாடல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பல சாதனைகளையும் படைத்துள்ளது.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய காந்தகண்ணழகி பாடலின் வீடியோ 130க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
தற்போது கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழித்து இந்த படத்தின் சூப்பர்ஹிட் மெலடி பாடலான மைலாஞ்சி பாடல் உருவான விதத்தை ஒரு வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மூணார் பகுதிகளில் மிக அழகாக எடுக்கப்பட்ட இந்த பாடல் எப்படி படமாக்கப்பட்டது ,எவ்வளவு பேர் பணியாற்றினர்,பாடல் எடுக்கையில் நடிகர்களின் சில ரகளைகள்,நகைச்சுவைகள் உள்ளிட்டவை அடங்கிய இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த மேக்கிங் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்