தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மகேஷ்பாபு.மாஸ் ஹீரோவாக உருவெடுத்து தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக அசத்தி வருகிறார் மகேஷ்பாபு.கடைசியாக இவர் நடிப்பில் Sarkaru Vaari Paata படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து மகேஷ்பாபு தனது 28ஆவது படத்தில் நடிக்கவுள்ளார்.SSMB28 என்று இந்த படத்திற்கு தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தினை த்ரிவிக்ரம் இயக்குகிறார்.மூன்றாவது முறையாக மகேஷ்பாபு த்ரிவிக்ரமுடன் இணைவதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
Haarika & Hassine Creations நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பூஜா ஹெக்டே இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி 2023-ல் ரிலீசாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கியுள்ளது என ஒரு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவுடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.