தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் Sarkaru Vaari Paata படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அதோடு இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் செம ஹிட் அடித்து வருகிறது.இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த படத்தின் ட்ரைலர் வரும் மே 2ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த ட்ரைலர் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
The wait ends!
— Mythri Movie Makers (@MythriOfficial) April 28, 2022
Rocking #SVPTrailer drops on MAY 2nd💥
Super🌟 @urstrulyMahesh is all set to mesmerize you with his MASS Energy😎#SarkaruVaariPaata#SVPOnMay12@KeerthyOfficial @ParasuramPetla @MusicThaman @madhie1 @14ReelsPlus @GMBents @saregamasouth pic.twitter.com/eyrDbdx8aM