சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகள் அனைத்திற்கும் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டண விலையை மறு நிர்ணயம் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள பேருந்து நிலையங்கள், சென்னை சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டண விலை அதிகமாகவே இருக்கிறது. ஆனால் சென்னை மாநகராட்சியின் திரையரங்குகளில் உள்ள பார்க்கிங் கட்டண விலை 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டண விலையை மாற்றி அமைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்குகளுக்கான பார்க்கிங் கட்டண விலையை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் குறைவாக உள்ளதாக தெரிவித்து பார்க்கிங் கட்டண விலையை மறுநிர்ணயம் செய்யுமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.