வெங்கட் பிரபு மற்றும் STR இணைந்து பணியாற்றும் திரைப்படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
சென்னை VGP கோல்டன் கடற்கரையில் செட் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த படப்பிடிப்பில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைந்துள்ளனர் படக்குழுவினர். போலீஸ் உடையில் மனோஜ் பாரதிராஜா மற்றும் SJ சூர்யா இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் மார்ச் 19-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன என்ற அறிவிப்பை FEFSI யூனியன் சார்பாக ஆர்.கே. செல்வமணி தெரிவித்தார். இந்நிலையில் மாநாடு படமும் நிறுத்தப்படும் என்று மீம்ஸ் கொண்டு கலாய்த்து வந்தனர் இணையதள போராளிகள். இதற்கு தக்க பதிலடி தந்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா இடம் கொடுப்போம்? இந்த பேக்கப்பில் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் STR தான். மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் மாநாடு என்று அசத்தலாக பதிவு செய்துள்ளார்.
கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா இடம் கொடுப்போம்?
— sureshkamatchi (@sureshkamatchi) March 16, 2020
இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் #STR தான்.
மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் "மாநாடு" pic.twitter.com/RFKhqva4QO